மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று (ஜூலை 28) பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக விநாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள 13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திறக்கப்படும் நீர் 5,339 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடைமடை வரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 109 அடியை தாண்டியுள்ளது.