எச்சரிக்கை.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை

95740பார்த்தது
எச்சரிக்கை.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடத்தில மழைக்கு வாய்ப்பு உள்ளது. லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி