தென்னாப்பிரிக்கா -
இந்தியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஒன்றரை நாளில் முடிவுக்கு வந்துள்ளது. இரு அணிகளும் 107 ஓவர்கள் மட்டுமே வீசியது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் மிகக் குறுகிய நேரத்தில் முடிந்த போட்டியாக இது அமைந்துள்ளது. இந்த ஆட்டம் ஜன.3ஆம் தேதி போட்டி தொடங்கிய நிலையில் ஜன.4ஆம் தேதி போட்டி முடிந்துள்ளது. 5 நாட்கள் நடைபெற வேண்டிய இந்த போட்டி ஒன்றரை நாளில் நிறைவுபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.