எச்சரிக்கை: வெப்ப அலையால் பக்கவாதம் ஏற்படலாம்

559பார்த்தது
எச்சரிக்கை: வெப்ப அலையால் பக்கவாதம் ஏற்படலாம்
தமிழகத்தில் கோடை வெயிலில் தாக்கம் மார்ச் மாதத்திலேயே தொடங்கி விட்டது. வெப்பம் அதிகரித்து வருவதால் மக்களுக்கு தலைவலி, மயக்கம், சோர்வு ஏற்படக்கூடும். வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு வெப்ப அலையால் பக்கவாதம் கூட ஏற்படலாம். தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் அதிகரிப்பதால் இதுபோல ஏற்பட வாய்ப்புள்ளது. வயல் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள், மூட்டை தூக்குபவர்கள், ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி