ரோஸ்மில்க் செய்யணுமா? வீட்டிலேயே சிரப் செய்யலாம்

75பார்த்தது
ரோஸ்மில்க் செய்யணுமா? வீட்டிலேயே சிரப் செய்யலாம்
பனீர் ரோஜா இதழ்களை தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலை தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். பாதியாக சுண்டி வரும் போது அதில் சர்க்கரை சேர்த்து பாகு பதம் வந்தவுடன் இறக்கி, அரை மூடி எலுமிச்சை பழம் பிழிந்து, ஆறிய பின் பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் நேரத்தில் பாலில் இந்த சிரப்பை ஊற்றி, ஐஸ் கட்டிகளை சேர்த்து சுவையான, குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்து குடிக்கலாம்.

தொடர்புடைய செய்தி