தன்னிச்சையாக வாக்காளர் பெயரை நீக்க முடியாது

68பார்த்தது
தன்னிச்சையாக வாக்காளர் பெயரை நீக்க முடியாது
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை தன்னிச்சையாக நீக்க முடியாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் புகாருக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் விளக்கம் கேட்ட பிறகுதான் பெயர்கள் நீக்கப்படுகிறது. முகவரி மாற்றம், மரணம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே பெயர்கள் நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்களை தேர்தல் துறையால் தன்னிச்சையாக நீக்கப்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி