மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டின் மத்திய சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வினோஜ் பி செல்வம் இரண்டாம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி பெருமளவில் அதிகரித்துள்ளது. மத்திய சென்னையில் முந்தைய தேர்தலில் 6% ஆக இருந்தது. இம்முறை 4 மடங்கு அதிகரித்து 24% ஆக உயர்ந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் 40% ஐ தாண்டி வெற்றி பெறுவோம் என்று உறுதியளிக்கிறோம், எங்கள் மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு நன்றி” என தெரிவித்தார்.