மதுரை மாவட்டம் வெளிச்சநத்தத்தில் அனுமதியின்றி விடுதலை சிறுத்தை கட்சியின் கொடி கம்பம் வைக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை, விசாரிக்க சென்ற துணை வட்டாச்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை விசிக-வினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வி.ஏ.ஓ. பரமசிவம் அளித்த புகாரின் பேரில், விசிக நிர்வாகிகள் ஐந்து பேர் உள்பட 21 பேர் மீது, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.