*விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் போதை பொருளுக்கு எதிரான மாணவத் தூதுவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். *
மேலும் இந்த நிகழ்ச்சியில் விருது நகர் மாவட்டத்தில் உள்ள 1000க்கு மேற்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான மாணவர் தூதுவர்களான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
.
மேலும் சில மாணவர்கள் போதை பொருட்களை ஒரு முறை எடுத்துக் கொண்டால் நம்மை ஒன்றும் செய்து விடாதே என நினைக்கிறார்கள் என்றார்.
மேலும் பேசிய இறையன்பு நண்பர் களிடம் நன்மதிப்பை பெறுவதற்காக ஒரு சில மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்துகிறார் கள் எனவும் அவ்வாறு பயன்படுத்தும் மாணவர்கள் அதனை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள் எனவும் இது ஒரு சமூக பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது என்றார்.
மேலும் பேசிய இறையன்பு முதலில் ஒரு சில மாணவர்கள் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக போதை பொருட் களை பழகியவர்கள் பின்னர் போதைப் பொருட்களை பயன்படுத்த நண்பர்கள் வர மாட்டார்களா என சிந்திப்பார்கள் என்றார்