தேர்தல்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது

75பார்த்தது
மக்களவை பொதுத் தேர்தல் 2024, ஏப்ரல் 19 அன்று நடைபெறயுள்ளதை முன்னிட்டு தேர்தலில்; போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் 20. 03. 2024 முதல் 27. 03. 2024 வரை நடைபெற்றது. 28. 03. 2024 அன்று வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, 30. 03. 2024 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 1, 60, 107 ஆண்கள், 1, 65, 332 பெண்கள், 37 இதர வாக்காளர்களும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 1, 35, 309 ஆண்கள், 1, 43, 271 பெண்கள், 13 இதர வாக்காளர்களும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1, 12, 699 ஆண்கள், 1, 18, 559 பெண்கள், 59 இதர வாக்காளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 1, 13, 988 ஆண்கள் 1, 19, 121 பெண்கள், 28 இதர வாக்காளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 1, 06, 097 ஆண்கள் 1, 11, 158 பெண்கள், 46 இதர வாக்காளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1, 05, 017 ஆண்கள் 1, 11, 079 பெண்கள், 22 இதர வாக்காளர்களும் என மொத்தம் 7, 33, 217 ஆண்கள், 7, 68, 520 பெண்கள், 205 இதர வாக்களர்கள் என ஆக மொத்தம் 15, 01, 942 வாக்களர்கள் உள்ளனர்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி