ம.பி: சோட்டி மால்பூர் கிராமத்தில் கணவரை இழந்த விதவை பெண்ணுக்கு கிராமத்தினர் யாரும் உதவாத நிலையில், 48 வயதான பழங்குடியின நபர் அப்பெண்ணின் குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார். இந்நிலையில், அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி கிராம மக்கள் அவரை நிர்வாணப்படுத்தி, அடித்து, ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர். இதையடுத்து, 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.