விருதுநகர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

61பார்த்தது
விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அந்த கட்சியின் நகரக்குழுச் செயலாளர் ஜெயபாரத் தலைமை தாங்கினார். 

மேலும் ஆர்ப்பாட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திதர வேண்டும், பெண் குழந்தைகள் மீதான வன்கொடுமையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி