சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரை மருத்துவமனையில் இருந்து ஊழியர்கள் அடித்து உதைத்தனர். மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை பாதுகாவலர்கள், பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். சுற்றி வளைத்து பிடிக்கப்பட்ட இளைஞரை பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அடித்து உதைத்தனர். பின்னர் அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.