காரியாபட்டி அருகே A. நெடுங்குளம் கிராமத்தில் செல்வவிநாயகர், ராஜகாளியம்மன், உச்சி மாகாளியம்மன், பேச்சியம்மன், அய்யனார் பதினெட்டாம்படி கருப்புசாமி உள்ளிட்ட பதினோரு ஆலயங்களில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே A. நெடுங்குளம் பணிக்கனேந்தல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ ராஜகாளியம்மன், ஸ்ரீ உச்சி மாகாளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ ராக்காயி அம்மன், ஸ்ரீ பாம்பாலம்மன், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி, ஸ்ரீமுத்து கருப்பசாமி, ஸ்ரீ அழகு நாச்சி அம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ முனியாண்டி சாமி ஆகிய 11 ஆலயங்களில் தெய்வங்களுக்கும் ஆலய விமான கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் கடந்த 20 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய யாகசாலை பூஜையில் கோ-பூஜை, தனபூஜை, வாஸ்து சாந்தி, ரக்ஷாபந்தனன், மகாபூர்ணகுதி, நடைபெற்று கும்பங்கள் புறப்பாடாகி இன்று காலை 10: 30 மணிக்கு மேல் 11 ஆலயங்களின் விமான கலசங்கள் மற்றும் விக்கிரகங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.