ஆதரவற்றோருக்கு வீடுகள் கொடுத்த நாடக நடிகர் ராதாகிருஷ்ணன்

85பார்த்தது
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே நொச்சிக்குளம் கிரமத்தில் பிறந்து வளர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் நாடகத்தில் பபுன் நடிகராக 19 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். மேலும் தமிழ்குடிமகன் திரைப்பட மூலம் மக்களுக்கு அறிமுகமாகி பல்வேறு சேவைகள் செய்து வருகிறார். மனிதனுக்கு தேவை உணவு, உடை, உறைவிடம் இவை இல்லாத ஏழை மற்றும் ஆதரவற்றோர்களை கண்டறிந்து அவர்களுக்கு தம்மால் முடிந்த அளவு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் வசதி படைத்தவர்களிடம் ஏழை எளியவர்களுக்காக உதவிக்கரம் நீட்ட கோரி அவர்கள் உதவியோடு கடந்த 15 ஆண்டுகளாக வீடு இல்லாத ஏழை எளியோர் மற்றும் ஆதரவற்றோருக்கு வீடுகள் கட்டி கொடுத்து வருகிறார்.

அவரது தாயின் நினைவாக நொச்சிக்குளம் கிராமத்தில் அன்பாலயம் எனும் ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவி அதில் 20-க்கும் மேற்பட்டோர் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அவரது 2 ஏக்கர் பரப்பளவுள்ள சொந்த இடத்தில் முதல் கட்டமாக கண்பார்வையற்றோர், ஆதரவற்றோர், ஏழை எளியோர், கணவரை இழந்தோரை தேர்வு செய்து அவரது நாடக நடிப்பின் மூலம் வரும் பணத்தை வைத்தும் மற்றும் நண்பர்கள் உதவியோடும் சுமார் 26 லட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் கட்டப்பட்டு அதற்கு திறப்பு விழா இன்று நடைபெற்றது.

அந்த 4 வீடுகளை நாடக நடிகர் ராதாகிருஷ்ணன் அவரது பெற்றோர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், வீரணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி