குண்டாற்றில் வெகு விமர்சையாக நடைபெற்ற பிட்டுத் திருவிழா

63பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீதிருமேனிநாதர் கோவில் பிட்டுத்
திருவிழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமர்சையாக நடைபெற்றது. வந்தியம்மை என்ற பிட்டு பலகாரம் விற்கும் மூதாட்டிக்கு உதவி செய்ய மனித உருவில் வந்த சிவ பெருமான், அந்த மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக் கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார்.

ஆனால், பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவ பெருமானை பாண்டிய மன்னன் பிரம்பால் அடித்த திருவிளையாடலை உணர்த்துவதே இந்த பிட்டுக்கு மண் சுமந்த படலம். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்பதை உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த விழா அனைத்து
சிவாலயங்களிலும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதே போன்று, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருள்மிகு துணைமாலை அம்மன் சமேத ஸ்ரீ திருமேனிநாதர் சுவாமி கோவில் பிட்டுத் திருவிழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்து சுவாமியைத் தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி