மத்திய அரசானது, சமக்ர சிக்சா அபியான் (SSA) என்ற திட்டத்தின் கீழ் இது வரையில் தமிழ்நாடு மாநிலத்திற்கு 10,443 கோடி ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியுள்ளது. SSA திட்டத்தின் கீழ் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்ற கடைசி நிதி தவணை ஆனது 2023-24 ஆம் நிதியாண்டில் 1,871 கோடி ரூபாய் ஆகும். அதன் பின்னர், 2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் விதிகளை தமிழ்நாடு ஏற்க மறுத்ததால், மத்திய அரசானது 2,152 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழகத்தின் பங்கினை நிறுத்தி வைத்துள்ளது.