KKR அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற PBKS அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சண்டிகரில் நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த இரு அணிகளும் பலபரீட்சை நடத்த உள்ளது. KKR அணியில் மொயின் அலிக்கு பதில் ஆன்ரிக் நோர்க்கியா சேர்க்கப்பட்டுள்ளார். PBKS அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.