ரன் அவுட் ரகசியம் குறித்து ரிஷப் பண்ட் மற்றும் ஜாகீர் கானிடம் தோனி ஜாலியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தோனி, "சாதாரணமாக ஸ்டம்பை பார்த்து பந்தை தூக்கி எறிந்தேன்" என்று கூறினார். அதற்கு ஜாகீர் கான் "அவ்வளவு சுலபமாவா செய்தீர்கள்?" என்ற ஆச்சரியத்துடன் கேட்டார். பின் ரிஷப் பண்ட் "நான் ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடிய போது ரன் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்துடன் திரும்பிச் சென்றேன்" என ஜாலியாக கூறினார்.