KKR அணிக்கெதிரான போட்டியில் PBKS 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 112 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த KKR அணிக்கு PBKS பௌலர்கள் அதிர்ச்சியளித்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த KKR 15.1 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. PBKS தரப்பில் சாஹல் 4 மற்றும் மார்கோ ஜென்ஸன் 3 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினர். சாஹல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.