91 வயதில் கள்ளக்காதல்.. 88 வயது பாட்டியை குத்தியவருக்கு ஜாமீன்

67பார்த்தது
91 வயதில் கள்ளக்காதல்.. 88 வயது பாட்டியை குத்தியவருக்கு ஜாமீன்
88 வயது மனைவியை கத்தியால் குத்திய 91 வயது கணவருக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கொச்சியைச் சேர்ந்த முதியவருக்கு அறிவுரை வழங்கிய நீதிபதி, வாழ்க்கையின் இறுதி நாட்களில் மனைவி மட்டுமே உடன் இருப்பார் எனக் கூறி ஜாமீன் வழங்கினார். மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி முதியவரை, அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முதியவர், மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். தொடர்ந்து கடந்த மார்ச் 21 முதல் சிறையில் இருந்தார். வயது மூப்பை சுட்டிக்காட்டி நீதிபதி தற்போது ஜாமீன் வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி