தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மெய்வழிச்சாலை கிராமம் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். இங்குள்ள வீடுகளின் சுவர் 5 அடி மட்டும்தான் இருக்கும். ஊருக்குள் ஒரேயொரு மாடி வீடு கூட கிடையாது, இங்கு யாரும் நாய் வளர்ப்பதில்லை, பைக்குகளை ஊருக்குள் தள்ளிக்கொண்டுதான் வரவேண்டும், வீடுகளுக்கு கதவுகள் கிடையாது, இருந்தாலும் அது பூட்டப்படுவது கிடையாது. இப்படி பல்வேறு விசித்திரங்களை கொண்டுள்ளது.