தவெக நிகழ்ச்சிகளில் திட்டமிட்டே தவிர்க்கப்படுகிறதா அசைவ உணவுகள்? தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி என அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இன்றைய இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும் சைவம்தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம், அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம். ஆனால் விஜய் இதை தவிர்த்து வருவதாகவும் இதற்கான காரணம் தெரியவில்லை என சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.