திமுக சட்டதிட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், தன் பேரனை ஹிந்தி படிக்க வைத்திருக்கிறார் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அண்ணாமலை பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பொள்ளாச்சி தனியார் பள்ளி முன்பு திமுக சட்டதிட்ட குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் திரண்ட திமுகவினர், தனது பேரனின் மார்க் சீட்டை ஆட்டுக்குட்டியிடம் காண்பித்து படித்து பார்க்கச் சொல்லி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் .