வெள்ள பாதிப்பால் கஷ்டப்படும் மக்களைத் தேடி நிவாரண பொருட்கள்

548பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு சிவகாசி மம்சாபுரம் கிளைகள் சார்பாக தூத்துக்குடி திருநெல்வேலி பகுதிகளில் கடந்த 18ஆம் தேதி பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பால் கஷ்டப்படும் மக்களைத் தேடி நிவாரண பொருட்களை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது அதன்படி ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான பலசரக்கு. ஜவுளி நோட்டு புத்தகங்கள் மளிகை சாமான்கள் அரிசி மற்றும் காய்கறிகள் ஆகியவைகள் எடுத்துச் செல்லப்பட்டன
இந்த துவக்க நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேல ரத வீதியில் உள்ள நலம் இயற்கை அங்காடி முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் தமுஎகச மாவட்ட செயலாளர் கவிஞர் லட்சுமி காந்தன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் மேலும் ஆனந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் திரு ஆனந்தகுமார் அவர்கள் திரு. நந்தகோபால் மற்றும் சந்திரராஜன் கணேசன் ஓவியர் கலைச்செல்வன் முனியாண்டி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டார்கள் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் ஏற்பாட்டினை பொருளாளர் மரிய டேவிட். செயலாளர் எஸ். நித்யானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி