சென்னையில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்திய நிலையில் இது தொடர்பான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்ததால் அங்கு தாக்கல் செய்த மனுவை தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றது.