திருமணமான ஒன்றரை ஆண்டில் கணவர் மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பீஜினோரைச் சேர்ந்த தம்பதி தீபக் - ஷிவானி, இருவருக்கும் 6 மாத பெண் குழந்தை இருக்கிறது. இதனிடையே, கடந்த ஏப்.4 அன்று தீபக் மர்மமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானதால் ஷிவானி கணவரின் வேலைக்காக கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என தீபக்கின் உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.