ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்துக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மேலும், குடியரசுத் தலைவருக்கு 10 மசோதாக்களை அனுப்பிவைத்த ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடுத்தவாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.