ED விசாரணைக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த டாஸ்மாக் முடிவு

58பார்த்தது
அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முன்னதாக டாஸ்மாக் விவகாரத்தில் உயர் நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, தாக்கல் செய்த மனுவை தமிழக அரசு திரும்ப பெற்றது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி