’டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதன்பின், கொள்முதல், விற்பனை போன்றவற்றின் வாயிலாக, ரூ.1,000 கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக, அமலாக்கத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் தற்போது நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுகிறது. திரும்ப பெறுவதாக இருந்தால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.