கல் உப்பு, பொடி உப்பு என இரண்டிலும் அயோடின் அளவுகளில் வேறுபாடுகள் இருந்தாலும், சோடியம் அளவில் எந்த பெரிய மாற்றமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உப்பு என்பது பொதுவாக சோடியம் குளோரைட் தான். அது எந்த வடிவில் இருந்தாலும், சோடியம் அளவு ஒன்றுதான். அதனால், இந்த இருவகை உப்புகளையும் எந்த அளவுக்கு குறைவாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.