தமிழகத்தில் இன்று (மார்ச்.25) முதல் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்தது. இந்நிலையில், திருப்பூரில் பிளஸ் 2 பொதுத்தேர்வு அறையில் பிட் சோதனை என்ற பெயரில், 6 மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக தனியார் பள்ளி ஆசிரியரான சம்பத் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதை அடுத்து, ஆசிரியர் சம்பத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.