சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்ட உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இன்று அதிகாலை சென்னையில் அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட 8 பகுதிகளில் அடுத்தடுத்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரித்த நிலையில், மும்பை செல்லும் விமானத்தில் இருந்த கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அவர்கள் உ.பி.,யை சேர்ந்த சூரஜ், ஜாபர் என்பது தெரிந்தது.