பிரபல இந்திய கபடி வீரர் தீபக் நிவாஸ் ஹூடாவுக்கும், முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை சவீதி பூராவுக்கும் 2022இல் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த பிரவரி மதம் வரதட்சணை கொடுமை செய்கிறார்கள் என பூரா போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து விவகாரத்துக்கோரி இருவரும், கடந்த மார்ச் 15ஆம் தேதி ஹரியானாவின் ஹிசாரில் உள்ள காவல் நிலையத்தில் விவாகரத்து குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பூரா எழுந்து சென்று ஹூடாவை தாக்கியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.