மும்பையில் தன்னுடைய தாயின் இரண்டாவது கணவரால் 2 ஆண்டுகளாக 24 வயது பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். நேற்று (மார்ச்.24) அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், அந்த நபரை கத்தியால் தாக்கி, அவரின் ஆணுறுப்பை துண்டித்துள்ளார். பின்னர் அவரின் கண்களை துணியால் கட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். வலியில் துடித்த அவர் வீட்டைவிட்டு வெளியே ஓடினார். அப்போது விடாமல் அவரை விரட்டி விரட்டி அப்பெண் தாக்கியுள்ளார்.