பட்டாசு ஆலைக்கு பயிற்சி சான்றிதழ் அவசியம். மாவட்ட ஆட்சியர்

6474பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தடுப்பதற்காக தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் விபத்துகளை தவிர்ப்பதற்காக பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு, சிவகாசி பட்டாசு பயிற்சி மையத்தில், ஒரு மாத பயிற்சிக்கு வருவது சிரமமாக இருப்பதுடன், உற்பத்தி பணிகளில் பாதிப்பு ஏற்படுவதாக, பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களும், பட்டாசு ஆலை உரிமையாளர்களும் தகவல் தெரிவித்தனர்.

பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வரும் போர்மேன்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு, திங்கள் கிழமையிலிருந்து வெள்ளி கிழமை வரை இந்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்ளாமல் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன் மற்றும் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிற்சி பெறாத தொழிலாளர்களை வைத்து செயல்படும் பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தப்படும், எனவே, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி