சிவகாசி: கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்....

55பார்த்தது
சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழி வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள பூவநாதபுரம் இந்திரா நகர் காலணியில் 34 குடும்பத்தைச் சேர்ந்த தலித் மக்களுக்கு கடந்த 1998 ஆம் ஆண்டு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்யப்பட்டு 34 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது. நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவருக்கு இணைய வழி பட்டா வழங்க கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கடந்த 8. 8. 2023 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புகளுக்கு
அ-பதிவேடு மற்றும் தமிழ் நில இணையதள வருவாய் கணக்குகளில் அரசு புறம் போக்கு ஆதிதிராவிடர் நத்தம் என்ற பெயர் மாற்றம் செய்ய வருவாய் வட்டாட்சியருக்கு ஆணையிட்டு, இதுவரை இணைய வழிபட்டா பட்டிலின மக்களுக்கு வழங்கவில்லை கண்டித்தும் உடனடியாக பட்டா வழங்க கோரி சிபிஎம் கட்சியினர் மற்றும் பூவநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 34 குடும்பங்களை சேர்ந்த உறுப்பினர்கள் சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வட்டாட்சியர் வடிவேல் அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தர்ணா போராட்டம் கைவிடப்பட்டன.

தொடர்புடைய செய்தி