சென்னையில் FORMULA 4 கார் பந்தயம் நடத்துவதற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிடம் (FIA) சான்றிதழ் பெறுவதற்கு இன்று (ஆகஸ்ட் 31) இரவு 8 மணி வரை சென்னை உயர்நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். FIA சான்றிதழ் கிடைத்த பின்பே பந்தயம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி அளித்துள்ளது.