கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் பாரா மெடிக்கல் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் அனுப்பிரியா என்ற மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.