சமயபுரத்தில் சித்திரை தேர் திருவிழா.. வீடியோ

55பார்த்தது
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேர் திருவிழா நேற்று  நடைபெற்றது. காலை 11 மணியளவில் தேர் இழுக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் முடி காணிக்கை செலுத்தியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி