தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி காவல்நிலையம் முன்பு விஷம் குடித்து இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில், காவல்நிலைய தலைமைக் காவலர் மணிமேகலை, 2 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனது சகோதரனை பொய் வழக்கில் கைது செய்துள்ளதாக கூறி இரண்டு சகோதரிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள், தலைமை காவலர் மணிமேகலை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.