3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசம்

66பார்த்தது
3000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
சேலம்: எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதேபோல் காட்டூர், காசிக்காட்டூர், பில்லுக்குறிச்சி, சவரி ரெட்டியூர், உள்ளிட்ட பகுதிகளில் மழையின் போது வீசிய சூறாவளி காற்றுக்கு குலை தள்ளிய நிலையில் இருந்த 3,000 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. மேலும் பல்வேறு இடங்களில் நெற்கதிர், செங்கரும்பு ஆகியவை காற்றுக்கு சாய்ந்தது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி