திமுகவை சேர்ந்த முன்னாள் குளித்தலை எம்எல்ஏ கந்தசாமி உடல்நலக்குறைவால் காலமானார். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவுடன் சேர்ந்து பணியாற்றிய கந்தசாமி,1967-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, 1971-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் அமோக வெற்றி பெற்றார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (ஏப்.16) காலமானார்.