சிவகாசியில் சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் புகையிலை விற்றவர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி பி. கே. என். ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஹாஜிராஜன் (42). இவர் சிவகாசி பழனியாண்டவர் தியேட்டர் அருகே பெட்டிக் கடை வைத்து நடத்தி வருகின்றார். இவரது கடையில் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் SI மாடசாமி சோதனையிட்ட போது ரூ. 2ஆயிரத்து 370 மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் சட்டவிரோதமாக பெட்டி கடையில் பதுக்கிய புகையிலையை கைப்பற்றிய போலீஸார் ஹாஜிராஜன் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.