மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இறுதியாட்டம் நேற்று இரவு 8.30 மணிக்கு இந்தியா - சீனா அணிகளுக்கு இடையே நடந்தது. இரண்டு அணிகளும் ஆட்ட நேர முடிவில் டிராவில் இருந்தன. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. மேலும், ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளுக்கும் தலா ரூ.2 லட்சம் எனவும், ஆதரவு ஊழியர்கள் அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.