கர்நாடகா: ராமலிங்கய்யா என்ற நபர் தனது மருமகளை அண்மை காலமாக பலாத்காரம் செய்ய முயற்சித்திருக்கிறார், அவர் தப்பி வந்த நிலையில் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டியும் வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 14) மீண்டும் மருமகளை அவர் சீரழிக்க முயற்சித்த போது அவர் எதிர்த்து போராடினார். இதனால் ஆத்திரமடைந்த ராமலிங்கய்யா மருமகளை மண்வெட்டியால் அடித்துக் கொன்றார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.