விருதுநகர்: ரீவில்லிபுத்தூர் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளும் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது. திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் அதன் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்நிலையில், அந்த கோயிலுக்குச் சென்ற இளையராஜா, கோயில் கருவறைக்குள் நுழைந்தார். இதனைப் பார்த்த தீட்சிதர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். கருவறைக்கு வெளியில் நின்று சாமி தரிசனம் செய்த இளையராஜாவுக்கு மரியாதை செய்யப்பட்டது.