மலேசியாவில் தேனிலவை கொண்டாடிவிட்டு கேரளாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி உட்பட நான்கு பேர் நேற்று (டிச. 15) கார் விபத்தில் பலியாகினர். உயிரிழந்த தம்பதியின் பெயர் நிகில் (29) - அனு (26) ஆகும். கடந்த எட்டு வருடங்களாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்களுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. நிகில் கனடாவில் வேலை பார்த்து வந்த நிலையில் 2025 ஜனவரி 15ல் தம்பதி அந்நாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தனர்.