சோயா சங்க்ஸ், சோயா பீன்ஸ் எனப்படும் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுவதாகும். கடலை பருப்பு உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பில் இருப்பது போலவே இதிலும் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிக அளவில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. சில ஆய்வுகளின்படி சோயா சங்க்ஸ் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.