தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று (டிச. 15) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, "பல்வேறு கட்சிகளில் இருந்து தவெக-விற்கு வருபவர்களை மதித்து அவர்களை அரவணைக்க வேண்டும். ஆனால் அன்றிலிருந்தே கொடி கட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டனுக்கு தான் பதவி வழங்கப்படும். உழைக்காதவர்களுக்கு பதவி கிடையாது என்பதே விஜயின் நோக்கம்" என்றார்.